Kód: 52839748
கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத ... celý popis
Tamilština
Zadejte do formuláře e-mailovou adresu a jakmile knihu naskladníme, zašleme vám o tom zprávu. Pohlídáme vše za vás.
Nákupem získáte 29 bodů
Anotace knihy
கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி இன்புறலாம். பொருள் வளத்தைச் சிந்தித்துச் சிந்தித்து மகிழலாம்.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலன அவ்வாறு சிந்தித்ததனால் உண்டான விளைவுகளே. முதல் இரண்டு கட்டுரைகளும் விநாயகப் பெருமானைப் பற்றியவை. ஏனையவை முருகப் பெருமானைப் பற்றியவை, முதல் கட்டுரையும் முடிவுக் கட்டுரையும் திருவிளையாடற் புராணத்தில் வரும் இனிய செய்யுட் களினூடே புகுந்து சிந்தித்த சிந்தனைச் சித்திரம்.
8 முதல் 18 வரையில் உள்ள கட்டுரைகள் சேந்தனார் பாடிய திருவிடைக்கழித் திருவிசைப்பாவிலுள்ள பதினொரு பாடல்களின் விளக்கம். முருகனைக் காதல் நாயகனாக வைத்துப் பாடிய பாடல்கள் அவை அவற்றை உரையாடலாக விரித்து விளக்கியிருக்கிறேன். பதினொரு பாடல்களுக்கும் ஒருவகையில் தொடர்பும் கூற முயன்றிருக்கிறேன்.
திருமுறைகளில் பல இடங்களில் முருகனைப் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. அவற்றை யன்றி ஒன்பதாம் திருமுறையில் ஒரு பதிகமும், பதினோராந் திருமுறையில் ஒரு நூலும் முருகனைப் பற்றியனவாக உள்ளன. பதினோராந் திருமுறையில் உள்ளது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை, ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பாவில் உள்ளது, இதிலுள்ள திருவிடைக்கழிப் பதிகம். இங்ககாலத்துக்குப் பின் தோன்றிய முருகனுடைய துதிகளில் சந்தப் பதிகமே பழையதென்று சொல்லலாம்.
Parametry knihy
287 Kč
TamilštinaOsobní odběr Praha, Brno a 45991 dalších
Copyright ©2008-26 nejlevnejsi-knihy.cz Všechna práva vyhrazenaSoukromíCookies
Vrácení do měsíce
571 999 099 (8-15.30h)Nákupní košík ( prázdný )
Nacházíte se: